News Update :

Plus Two Result


சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் பழனிராஜ், ஓசூர் அகல்யா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 9 பேர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்: பிளஸ் 2 தேர்வு முடிவை, எஸ்.எம்.எஸ்., மூலமும், மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நான்கு இணையதளங்களில், காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும். இணைய தளங்களில், முடிவை காண, மாணவர்கள், தங்களது தேர்வு பதிவு எண்களுடன், பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், "நிக்' மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், தேர்வு முடிவை, மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., மூலம், தேர்வு முடிவை அறிய, 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு, "TNBOARD REGISTRATION NO DOB' என்ற வடிவத்தில், எஸ்.எம். எஸ்., அனுப்ப வேண் டும். உதாரணத்திற்கு, 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில், தனது தேர்வு முடிவை அறிய, TNBOARD 125678,25/10/1995 என, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும். இந்த சேவை, காலை, 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே, முன்கூட்டியே, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright UserMedia | Design by Vijay Design | | Powered by UserMedia.