News Update :

இயற்பியல் | வினா விடைகள்


1. ஒரு குதிரைத்திறன் என்பது
அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்
2. வௌவால் ஏற்படுத்துவது
அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு
3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:
I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000
அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1
4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்
அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்
5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்
அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை
6. முதன்மை நிறங்கள்
அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்
7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்
அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்
8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை
அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N
9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்
அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை
10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்
அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.
11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது
அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்
12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?
அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்
13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்
அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்
14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்
அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்
15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்
அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்
அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்
17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று
18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய
அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ
19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்
அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி
20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்
அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை
அ. 100o C
ஆ. 110o C
இ. 120o C
ஈ. 130o C
22. ஒரு மின் விளக்கின் ஆயுள்
அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்
23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்
அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி
24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்
25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்
26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு
விடை: 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26.

இயற்பியல் | வினா விடைகள்




Ø  காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
Ø  காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
Ø  காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
Ø  காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
Ø  ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.
Ø  இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
Ø  காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
Ø  இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
Ø  காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
Ø  காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
Ø  காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
Ø  காந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.
Ø  காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
Ø  காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
Ø  ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.
Ø  மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.
Ø  மின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.
Ø  கடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.
Ø  மின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.
Ø  மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
Ø  ஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
Ø  மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.
Ø  மின்திறனின் அலகு வாட் ஆகும்.
Ø  உலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.
Ø  மின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.
Ø  மின்னோட்டமே மனிதனைக் கொல்லும்; உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.
Ø  எபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.
Ø  பொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.
Ø  கூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.
Ø  உலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.
Ø  கடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.
Ø  மனித உடல் ஒரு மின்கடத்தி.
Ø  மின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் மின்னூட்டம் தூண்டப்பட்ட மின்னூட்டம் என்கிறோம்.
Ø  நீர்த்துளிகள் சேர்ந்த தொகுப்பே முகில் எனப்படும்.
Ø  மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் மின்தடை.
Ø  மின்சார மணி மின்காந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Ø  நீச்சல் விதியை உருவாக்கியவர் ஆம்பியர்.
Ø  மின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு ஆர்மச்சூர்.
Ø  யுரேனியம், தோரியம், பொலோனியம், ரேடியம் போன்றவை இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
Ø  செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்ளைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
Ø  ஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப்பெற்றவை. ஹைட்ரஜன் அணுநிறையைவிட 4 மடங்கு கனமானது.
Ø  ஆல்ஃபா துகளானது கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
Ø  ஆல்ஃபா துகளானது அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால், இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகிறது.
Ø  பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களை பாதிக்கும்.
Ø  பீட்டா கதிர்கள் மெல்லிய அலுமினியத் தகடைக் கடக்கக் கூடியது.
Ø  காமா கதிர்கள் கண்ணிற்கு புலப்படாது.
Ø  காமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.
Ø  காமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.
Ø  காமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
Ø  எலெக்ட்ரோ மீட்டர், கெய்கர் முல்லர் எண்ணி, மேகப்பெட்டகம், குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
Ø  பாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
Ø  மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
Ø  டிரிட்டியம், கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
Ø  ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை, ஆகியவற்றை உருவாக்கலாம்.
Ø  காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
Ø  கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
Ø  கதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
Ø  கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
Ø  நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
Ø  தொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14 ஐசோடோப்பு பயன்படுகிறது.
Ø  கதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
Ø  கார்பன் - 14  கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
Ø  ரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள், நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.

இயற்பியல் | வினா விடைகள்


வெர்னியர் அளவி
 Ø  ஒரு மில்லி மீட்டரை விட குறைவான  நீளத்தை அளக்க வெர்னியர் அளவுகோல் பயன்படுகிறது.
Ø  வெர்னியரை கண்டுபிடித்தவர் பியரி வெர்னியர்.
Ø  வெர்னியர் அளவுகோல் என்பது முதன்மை அளவுகோலுடன் பயன்படுத்தப்படும் துணை அளவுகோல் ஆகும்.
Ø  மீட்டர் அளவுகோலில் மீச்சிற்றளவு - 1 மி.மீ.
Ø  வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு - 0.01 மி.மீ.
Ø  வெர்னியர் அளவுகோலில் நேர்ப்பிழை மற்றும் எதிர்ப்பிழை என்ற இரண்டு பிழைகள் உண்டு.
Ø  நேர்ப்பிழை இருந்தால் கண்டுபிடிக்கப்பட்ட நீளத்தில் இருந்து பிழைத் திருத்தம் செய்ய கழிக்க வேண்டும்.
Ø  எதிர்ப்பிழை இருந்தால், கண்டுபிடிக்கப்பட்ட நீளத்திலிருந்து பிழைத் திருத்தம் செய்ய கூட்ட வேண்டும்.
Ø  வெர்னியர் அளவுகோல் உள்ளீடற்ற உருளையின் உள்விட்டத்தை அளக்க உதவுகிறது.
Ø  திருகு அளவியானது ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவுக்கு துல்லியமாக அளவிடவும் மெல்லிய கம்பி, தகடு, தாள் ஆகியவற்றின் தடிமனை அளவிடவும் பயன்படுகிறது.
இயற்பியல் தராசு
 Ø  ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லிகிராம் அளவிற்கு துல்லியமாக காண பயன்படுவது இயற்பியல் தராசு.
Ø  இயற்பியல் தராசின் கத்தி விளிம்பு அகேட் கல்லால் ஆனது.
Ø  தூசியில் இருந்து பாதுகாக்கவும், காற்றோட்டத்தினால், குறிமுள் அளவுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், இயற்பியல் தராசு கதவுகளுடன் கூடிய கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
Ø  இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் 10 மி.கிராம்.
Ø  இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் 200 கிராம்.
Ø  இயற்பியல் தராசில் எடைக்கற்களை வலது தட்டில் வைக்க வேண்டும்.
Ø  இயற்பியல் தராசில் எடைகளைத் தராசுத் தட்டில் போடவும், எடுக்கவும் இடுக்கியையே பயன்படுத்த வேண்டும்.
நிறை:
 Ø  ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அதன் நிறை.
Ø  ஒரு பொருளின் நிறை இடத்திற்கு இடம் மாறாது.
Ø  பொருளின் நிறையை அறிய இயற்பியல் தராசு பயன்படுகிறது.
Ø  ஒரு பொருளின் மீது செயல்படும் விசையின் அளவே எடை எனப்படும்.
Ø  ஒரு பொருளின் எடை துருவப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
Ø  ஒரு பொருளின் எடை இடத்துக்கு இடம் மாறும்.
Ø  பொருளின் எடையை அறிய வில்தராசு, தராசு போன்றவை பயன்படுகிறது.
புவிஈர்ப்பு விசை
 Ø  புவிஈர்ப்பு விசையை கண்டறிந்தவர் - ஐசக் நியூட்டன்.
Ø  புவிஈர்ப்பு விசை இடத்திற்கு இடம் மாறுபடும்.
Ø  புவிஈர்ப்பு விசை துருவங்களில் அதிகமாக இருக்கும்.
Ø  சந்திரனின் மேல்பரப்பில் அதன் ஈர்ப்பு விசை புவிஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்காக உள்ளது.
Ø  புவிப்பரப்பிலிருந்து மேலே செல்லும்போது புவிஈர்ப்பு விசை குறைகிறது.
நீர்ம அளவிடல்
 Ø  பொதுவாக நீர்ம அளவீடுகள் லிட்டரில் குறிக்கப்படும்.
Ø  மிகச்சிறிய அளவில் நீர்ம அளவுகளை கண்டறிய பியூரெட், பிப்பெட் பயன்படுத்தப்படுகிறது.
Ø  பியூரெட்டில் அளவுக் குறியீடுகள் மேலிருந்து கீழாக குறிக்கப்பட்டிருக்கும்.

தனி ஊசல்:
Ø  ஊசலின் நீளம் என்பது தொங்கு புள்ளியிலிருந்து ஊசல் குண்டின் மையப் புள்ளி வரை உள்ள தூரமாகும்.
Ø  வினாடி ஊசலின் நீளம் 100 செ.மீ.
Ø  அலைவு நேரம் என்பது ஊசல் ஓர் அலைவைச் செய்ய ஆகும் நேரமாகும்.வினாடி ஊசலின் அலைவு நேரம் 2 வினாடி.
Ø  தனி ஊசலின் நீளம் அதன் அலைவு நேரத்தின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
Ø  ஊசலின் அசைவற்ற நிலையிலிருந்து எவ்வளவு தூரம் இழுத்து விடப்படுகிறதோ அத்தொலைவு ஊசலின் வீச்சு எனப்படும்.
Ø  தனி ஊசலின் அலைவு நேரம் அதன் வீச்சைப் பொருத்து மாறாது.
Ø  வினாடி ஊசலின் அதிர்வு நேரம் 1 வினாடி.
Ø  மின்னணு கடிகாரம் மிகத் துல்லியமாக நேரத்தை அளக்கப் பயன்படுகிறது.
அளவிடல்கள்:
 Ø  வளிமண்டல அழுத்தத்தை அளக்க பார்ட்டின் பராமானி பயன்படுத்தப்படுகிறது.
Ø  வளிமண்டலக் காற்றின் அழுத்தம் 76 செ.மீ.பாதரச அழுத்தம்.
Ø  பாரமானியில் பாதரச மட்டத்திற்கு மேலே உள்ள வெற்றிடம் டாரி செல்லி வெற்றிடம்எனப்படுகிறது.
Ø  உயரமான மலைகளின் உயரத்தை அளக்க ஆல்டிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.
Ø  சாதாரண பாரமானியில் திரவமாக பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
Ø  அனிராய்டு பாரமானியில் திரவம் கிடையாது.
Ø  அனிராய்டு பாரமானி ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளக்கப் பயன்படுகிறது.
Ø  விசைக்கு எண் மதிப்பும் திசையும் உண்டு.
Ø  திரவம் நிலையான பரும மதிப்பினையும், பரப்பு இழுவிசையையும் கொண்டது.
Ø  எந்திரங்களின் திறன் பொதுவாக அளக்கப்படும் அலகு - குதிரைத் திறன்.
Ø  குதிரைத் திறன் என்பது - 746 வாட்.
Ø  மின்திறன் அளக்கும் அலகு கிலோவாட் மணி.
Ø  ஒரு கிலோவாட் என்பது 1000 வாட்.
விசையின் திருப்புத் திறன்:
 Ø  விசை ஒன்று பொருளை நகர்த்தலாம் அல்லது நகர்த்த முயற்சிக்கலாம். இதனையன்றி அப்பொருளை சுழற்ற முயற்சிக்கலாம் அல்லது சுழலுமாறு செய்யலாம். விசையின் இச்சுழற்றுத் திறன் அல்லது திருப்புத் திறன் விசையின் திருப்புத் திறன் எனப்படும்.
Ø  விசை செயல்படும் நேர்க்கோட்டில் உள்ள புள்ளியில் திருப்புத்திறன் சுழி.
Ø  இரண்டு சமமான, எதிர்த் திசை இணை விசைகள் வெவ்வேறு புள்ளிகளில் செயல்படும்போது ஓர் இரட்டை உருவாகிறது.
Ø  இரட்டையின் செயல்பாட்டுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: குழாய் அடைப்பானை திருப்புதல், பேனா, பாட்டில் மூடியைத் திறத்தல், பென்சில் கூர்ப்பானின் பென்சிலைத் திருப்புதல், திருகாணியைத் திருப்புதல், திருப்புள்ளியைச் சுழற்றுதல், கடிகாரத்தின் சாவியைச் சுழற்றுதல்.
Ø  ஒரு பொருளின் ஆற்றல் என்பது அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும்.
Ø  நிலை ஆற்றல் என்பது ஒரு பொருளின் நிலையை அல்லது திரிபு நிலையைப் பொருத்ததாகும்.
Ø  ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்போது செய்யப்படும் வேலை அதன் நிலையாற்றலாக மாறும்.
Ø  ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றலைக் குறிப்பதாகும்.
Ø  பூமியின் முதன்மையான ஆற்றல் மூலம் சூரியன்.
Ø  விளையாட்டு வீரர்களால் உதைக்கப்பட்டு வெவ்வேறு வேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஓடும் கால் பந்தின் இயக்கம், காற்றில் பரவும் ஊதுவத்தியின் புகை இவை யாவும் தன்னிச்சையான இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  வில்லின் நாணிலிருந்து புறப்படும் அம்பு, துப்பாக்கியிலிருந்து விரையும் குண்டு இவையாவும் இடப்பெயர்ச்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  ஒரு பொருள் ஓர் அச்சைப் பற்றி சுழலுமானால், அவ்வியக்கம் சுழற்சி இயக்கம் எனப்படும். சுழலும் பம்பரம், மின் விசிறி ஆகியவை சுழற்சி இயக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும் அளவுகளுக்கு ஸ்கேலார் அளவு அல்லது திசையிலி அளவுருகள் என்று பெயர்.
Ø  நிறை, நீளம், நேரம், வெப்பநிலை, கோணம், பரப்பு, பருமன், அடர்த்தி, வேலை போன்றவை திசையிலி அளவுருகள் ஆகும்.
Ø  எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுருகளுக்கு திசை அளவுருகள் அல்லது வெக்டர் அளவுகள் என்று பெயர்.
Ø  இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம், விசை, உந்தம், எடை போன்றவை திசை அளவுருகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கம் எனப்படும். இதன் அலகு மீவி2 ஆகும்.
Ø  ஒரு கனமான சிறிய உலோகக் குண்டு மீட்சித் தன்மையற்ற, எடையற்ற நூலால் கட்டித் தொங்கவிடப்பட்ட அமைப்பே தனி ஊசல் ஆகும்.
Ø  மையப் புள்ளியிலிருந்து ஊசல் குண்டு அடையும் பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
Ø  தனி ஊசலின் அலைவு நேரம், ஊசல் குண்டு செய்யப்பட்டுள்ள பொருளையோ அல்லது குண்டின் நிறை மற்றும் உருவத்தையோ பொருத்தத்தல்ல.
Ø  அலைவு நேரம் ஊசலின் வீச்சைப் பொருத்ததல்ல.
Ø  ஓரலகு பரப்பில் செங்குத்தாக செயல்படும் இறுக்கு விசையே அழுத்தம் ஆகும்.
Ø  புவியைச் சுற்றியுள்ள காற்று உறையே வளிமண்டலம் எனப்படும்.
Ø  உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறையும்.
Ø  ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது ஏற்படும் காற்றின் எடையே ஒரு வளிமண்டல அழுத்தம் ஆகும்.
Ø  ஒரு வளிமண்டல அழுத்தம் 0.76 மீட்டர் பாதரச தம்பம் ஆகும்.
Ø  வளிமண்டல அழுத்தத்தை அளவிட பாரமானிகள் பயன்படுகின்றன
Ø  மை நிரப்பும் கருவி, நீர் இரைக்கும் பம்பு, வடிகுழாய், உறிஞ்சி குழாய், மருந்தேற்றும் ஊசி போன்றவை காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகள் ஆகும்.
Ø  ஃபார்ட்டின் பாரமானி என்பது வளிமண்டல காற்றின் அழுத்தத்தைத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.
Ø  சீரான மிக குறுகிய துவாரம் கொண்ட கண்ணாடிக் குழாய் நுண்புழைக் குழாய் எனப்படும்.
Ø  நுண்புழைக் குழாயில் திரவத்தின் ஏற்றம் அல்லது இறக்கம் நுண்புழை நிகழ்வு எனப்படும். திரவத்தின் பரப்பு இழுவிசை என்ற பண்பினாலேயே இந்நிகழ்வு ஏற்படுகிறது.
Ø  நுண்புழை ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுகின்றன.
Ø  பொருள்களை வெப்பப்படுத்தும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
Ø  ஒரு பொருளின் வெப்பநிலை என்பது, அதில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வெப்ப ஆற்றலின் அளவாகும். அது பொருளின் வடிவத்தை சார்ந்ததில்லை.
Ø  வெப்பமும்,வெப்பநிலையும் ஒன்றல்ல, அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகளைக் குறிக்கின்றன.
Ø  ஒரு பொருளின் வெப்பநிலை, துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்ததல்ல.
Ø  ஒரு பொருளின் வெப்பம் என்பது அப்பொருளின் உள்ளாற்றலாகும். அப்பொருளை சூடாக்கி அல்லது குளிர்வித்து அதன் வெப்பநிலையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
Ø  ஒரு பொருளின் அதிக வெப்பநிலை என்பது மூலக்கூறுகளின் அதிகமான இயக்க ஆற்றலைக் குறிப்பிடுவதாகும்.
Ø  பொருளின் வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி வெப்பநிலைமானி ஆகும்.
Ø  வெப்பத்தால் சீராக மாறும் பொருள்களின் பண்புகளை அளவிட்டு, பல்வேறு வகையான வெப்பநிலைமானிகளை அமைக்கலாம்.
Ø  சாதாரண வெப்பநிலைகளை அளவிட பாதரச வெப்பநிலை மானிகளே அதிகம் பயன்படுகின்றன.
Ø  திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் ஆகும்.
Ø  பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது.
Ø  சிறிதளவு வெப்பநிலை உயர்ந்தாலும், பாதரசம் சீராக விரிவடையும்.
Ø  பாதரசத்தின் கொதிநிலை 357 டிகிரி சென்டிகிரேட்/ உறைநிலை - 39 டிகிரி சென்டிகிரேட்.
Ø  ஆண்ட்ரூஸ் செல்சியஸ் என்பவர் வெப்பநிலையை அளவிடுவதற்கு செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.
Ø  மனிதனின் இயல்பு வெப்பநிலை 36.9 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
Ø  உறைகலவையில் உப்பும் பனிக்கட்டியும் 1:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
Ø  உறைகலவையின் வெப்பநிலை  23 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
Ø  வெப்பப்படுத்துவதால் நீளத்தில் ஏற்படும் மாற்றம் நீள்விரிவு எனப்படும்.
Ø  பரப்பில் ஏற்படும் மாற்றம் பரப்பு விரிவு எனப்படும்.
Ø  பருமனில் ஏற்படும் மாற்றம் பரும விரிவு எனப்படும்.
Ø  நீராவி என்ஜின் முதன்முதலில் தாமஸ் நியூ கமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஜேம்ஸ்வாட் என்பவரால் திருத்தி வடிவமைக்கப்பட்டது.
Ø  ஒரு வாயுவிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அப்பொருளின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
Ø  வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கும். வெப்பநிலை குறையும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறையும்.
Ø  கலத்தின் சுவர்களில் ஓர் அலகு பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் ஆகும்.
Ø  உறைகலவை என்பது தூளாக்கப்பட்ட பனிக்கட்டியும், சாதாரண உப்பு மற்றும் அமோனியம் நைட்ரேட் சேர்ந்த கலவையாகும்.
Ø  பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண்  1.38
Ø  தண்ணீரின் ஒளிவிலகல் எண்  1.33
Ø  வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.40
Ø  காற்றின் ஒளிவிலகல் எண் 1.00
Ø  நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருக்கும்போது நீரின் மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண்பதற்கு பெரிஸ்கோப் பயன்படுகிறது.
Ø  குவிலென்சானது மையத்தில் தடிமனாகவும், வெளிப்பகுதியில் மெல்லியதாகவும் இருக்கும்.
Ø  குழிலென்சானது மையத்தில் மெல்லியதாகவும், வெளிப்பகுதியில் தடிமனாகவும் இருக்கும்.
Ø  கிட்டப்பார்வை உள்ளவர்கள் குழிலென்சை பயன்படுத்தவேண்டும்.
Ø  தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்சை பயன்படுத்த வேண்டும்.
Ø  கலிலியோ தொலைநோக்கியில் கண்லென்சுகளாக குழிலென்சுகள் பயன்படுகின்றன.
Ø  டார்ச் விளக்கு, பட வீழ்த்திகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் உள்ள பல்பிலிருந்து வரும் ஒளியை எதிரொளித்து இணைக்கற்றையாக நெடுந் தொலைவிற்கு அனுப்ப குழி ஆடிகள் பயன்படுகின்றன.
Ø  மனிதனின் கண்ணின் விழிக்கோளம் வெளி அடுக்கு, மைய அடுக்கு மற்றும் உள் அடுக்கு என்ற மூன்று அடுக்குகளால் ஆனது.
நிறங்கள்:
 Ø  நிறமிகள் என்பது வெள்ளொளியின் சில கூறுகளை எதிரொளித்து ஏனையவற்றை உட்கவரும் ஒளிபுகாப் பொருள்கள் நிறமிகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள்: தாவரங்களில் உள்ள பச்சையம், வர்ணங்கள், சாயங்கள்.
Ø  பொதுவாக மனிதர்களின் கண்களால் காணக்கூடிய வானவில் முதன்மை வானவில் ஆகும். இது சூரியனிலிருந்து வரும் ஒளி ஒருமுறை அக எதிரொளிப்பும், இரண்டு முறை ஒளி விலகலும் பெற்று சிறுமத் திசை மாற்ற நிலையில் சூரிய ஒளிக்கதிர் வெளிவருவதால் முதன்மை வானவில் உருவாகிறது.
Ø  இரண்டாம் நிலை வானவில்லில் ஊதா நிறம் வெளிப்பக்கமும், சிவப்பு நிறம் உள்பக்கமும் இருக்கும்.
Ø  கண்ணுக்குப் புலனாகாத சிவப்பு நிறத்திற்கு அப்பால் உள்ள நிறமாலை அகச்சிவப்பு நிறமாலை எனப்படும்.
Ø  கண்ணுக்குப் புலனாகாத ஊதாவிற்கு அப்பால் உள்ள நிறமாலை புறஊதா நிறமாலை எனப்படும்.
Ø  அகச்சிவப்பு நிறமாலை சர்.வில்லியம் ஹேர்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
Ø  அகச்சிவப்பு சோதனைகளுக்கு நேன்ஸ்ட்குளோவர் மற்றும் குளோபார் பயன்படுகிறது.
Ø  அகச்சிவப்பு கதிர்களை கண்டுணர, உணர்வு நுட்பமுடைய வெப்ப மின்னிரட்டை அடுக்கு அல்லது போலோ மீட்டர் பயன்படுகிறது.
Ø  மூலக்கூறுகளின் அமைப்பை தெரிந்துகொள்வதற்கும், கரிம மூலக்கூறுகளை கண்டுபிடிக்கவும், அடையாளம் காணவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகிறது.
Ø  தோல் புற ஊதாக் கதிர்களை உட்கவர்வதால் வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது.
Ø  சூரியனும் பிற நட்சத்திரங்களும் இயற்கை ஒளிமூலங்கள் என்று கூறப்படுகிறது.
Ø  மரம், கரி எண்ணெய் சமையல் எரிவாயு போன்றவை செயற்கை ஒளிமூலங்கள்.
Ø  ஒளி வெற்றிடத்திலும் பரவும்.
Ø  மரம், கல் உலோகங்கள் ஒளிபுகா ஊடகங்கள்.
Ø  ஒளி நேர்க்கோட்டில் பரவுகிறது. கண்ணாடி, நீர், காற்று ஆகியவை ஒளிபுகும் ஊடகங்கள்.
Ø  மனிதனின் காதுகளால் கேட்கப்படும் ஒலி அளவு 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ்.
Ø  உலர்ந்த காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீ/வி. ஆகும்.
Ø  ஒழுங்கற்ற அதிர்வுகளால் உண்டாகும் ஒலி ஓசை எனப்படும்.
Ø  கார்பன் டை ஆக்சைடில் ஒலி மிக மெதுவாக பரவும்.
Ø  காற்றில் ஒலியின் வேகம் 330 மீ/விநாடி.
Ø  நீரில் ஒலியின் வேகம் 1415 மீ /விநாடி.
Ø  இரும்பில் ஒலியின் வேகம் 5040 மீ/விநாடி.

Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright UserMedia | Design by Vijay Design | | Powered by UserMedia.