News Update :

                                   போலிச் சூரியன்கள்!   




வானத்தில் மேகங்கள் தவழ்ந்து செல்வதைப் பார்க்கிறோம். இந்த மேகத்திரள்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு வகை.

இதில் சிர்ரோஸ்ட்ராடஸ் மேகம் ஒருவகை. இது, மேகங்கூட்டங்களின் மேல் உயர் அடுக்கில் காணப்படுவது. ஐஸ் துகள் களால் ஆன மெல்லிய மேகம் இது. இந்தத் துகள்கள் பளிங்கு போலிருக்கும். பகல் வேளையில் சூரியனுக்கு அருகில் ஒளிப்பிரகாசத் தோற்றத்தை இந்த மேகம் ஏற்படுத்தும்.

இந்த மேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும்போது இவ்விந்தை ஏற்படுகிறது. இந்த மேகத்தில் உள்ள ஐஸ் பளிங்குகள் அறுகோண முகப்புடையவை. இதில் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும்போது ஒளிவிலகல் ஏற்படுகிறது.

இதனால் உண்மையான சூரியனின் இருபுறங்களிலும் இரு சூரியன்கள் போன்ற தோற்றம் கொடுக்கிறது. அந்த வேளைகளில் வானில் மூன்று சூரியன்கள் தென்படும். சிர்ரோஸ்ராடஸ் மேகத்தின் பிரகாசமான பகுதிகளிலேயே இக்காட்சி ஏற்படும். இதைத்தான் `போலிச் சூரியன்கள்’ என்கிறார்கள்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright UserMedia | Design by Vijay Design | | Powered by UserMedia.